Wednesday, May 18, 2011

என் எண்ணத்துளிகள்


படுக்கை

அமைதியான உறக்கத்தில் ஆரவாரமான கனவுகள்
ஊமையான உடலுக்குள் வாயாடியான எண்ணங்கள்


கழிப்பறை

சுமைகளை இறக்க வந்தேன்
சிந்தனைகளை சுமக்க செய்தாய்

நுழை வாசல்

எப்பொழுதும் மூடி இருக்கும் இதற்க்கு  ஏன் இந்த பெயர்?

நாற்காலி

இளைப்பார, நான் உன் மீது உட்காருகிறேன்
நீ இளைப்பாற என்ன செய்வாய்?

கனவுகள்

மிக அழகாக, பிரகாஸமாக, விஸ்தாரமாக தோன்றி
சட்டென்று ஒரு நொடியில் மறைந்து போகும் அதிஸயம்.

இல்லத்தாள்

தாய்; மனைவி; தலைவி; துணைவி; சகோதரி; வழிகாட்டி; முதலாளி....

ஏமாற்றம்

எதிர் பாறாத மாற்றம்

No comments:

Post a Comment