Thursday, June 16, 2011

கவியரசு கண்ணதாசன்



கண்ணதாசன் தமிழ் திரையுலகத்தின் கண் போன்றவர். அழியா புகழ் பெற்ற அவர் மிக சிறந்த பாடல்களை எழுதியிருக்கிறார். அவரது பாடல்களும் அவரது நினைவுகளும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்க்கும். “எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை” என்று அவரே பாடிவிட்டார்.



அவர் எழுதிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில வரிகளை இங்கே தொகுத்து வழங்குகிறேன்



கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?



கேட்டுக்கொள்வது காதலின் இனிமை. கேட்டால் தருவது காதலி கடமை. இன்பம் என்பது இருவரின் உரிமை. யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை.



வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது.



நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே.



சென்றவனை கேட்டால் வந்து விடு என்பான் வந்தவனை கேட்டால் சென்றுவிடு என்பான்.



அண்ணார்ந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகென்று பெயருமிட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்.



வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு.

1 comment:

  1. கண்ணதாசன் எழுதியதில் எனக்கு பிடித்தது பல உண்டு, அதில் மிகவும் பிடித்தது “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே - கருடன் சொன்னது, அதில்... அர்த்தம் உள்ளது”.

    :)

    ReplyDelete