Sunday, August 28, 2011

தனிமையின் கடுமை – அது ஒரு கொடுமை



பழைய திரைப்பட பாடல் ஒன்று நினைவிற்கு வந்தது -

”தனிமையிலே இனிமை காண முடியுமா நள் இரவினிலே சூரியனும் தெரியுமா?”.

என் அனுபவத்தில் இவை இரண்டுமே நடந்து விட்டது நான் 1992ல் ரஷ்யா சென்றபோது ஜூலை மாதம் இரவு 12 மணிவரை சூரிய வெளிச்சத்தை பார்த்து வியந்தேன்.

வாழ்க்கையில் சில நேரங்களில் தனிமை எனக்கு இனிமை கொடுத்திருக்கிறது. ஆக சில சமயங்களில் தனிமையிலே இனிமை காண முடியும் அதே போல சில நகரங்களில் சில சமயங்களில் நள்ளிரவிலும் சூரியன் தெரியும்.

பொதுவாக நான் தனிமையை விரும்பாதவன்.

ஆனாலும், சில சமயங்களில் தனிமை சிந்திக்க/சிந்தனைகளை விரிவாக்க உதவும். அந்த வகையிலே தனிமை எனக்கு பிடிக்கும்.

தனிமை ஒரு கடுமையான நிலை – அந்த நிலையை தினமும் அனுபவிப்பது மிகவும் கொடுமை தனிமையின் வாட்டத்தில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன்.

இந்த கொடுமையில் இருந்து மீளுவதற்கு பல யுத்திகளை முயற்சித்து வருகிறேன்……தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது; ஷாப்பிங் மால்களில் சுற்றுவது; காரில் நீண்டதூரம் செல்வது; டேப்/சீடி போட்டு பாட்டு கேட்பது;….. என் நிழலை நானே துரத்தும் கதையாக முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது…..விடை கிடைக்கவில்லை….

தி.பா. ஆன்ந்த்
துபாய்
ஏப்ரல் பதினோறாம் நாள், இரண்டாயிரத்து பத்து

No comments:

Post a Comment