Friday, January 20, 2012

துபாயில் கல்யாணமாலை பட்டிமன்றம்



நேற்று இரவு கல்யாணமாலை வழங்கிய பட்டிமன்றம் துபாய் "Al Naser Liesure Land” அரங்கத்தில் நடந்தது.

பட்டிமன்றம் தொடக்க நேரம் இரவு ஏழு முப்பது என்று அறிவித்து விட்டு நிகழ்ச்சியை சுமார் இரண்டு மணி நேரம் தாமதம் செய்து துவங்கினர். ஏழு முப்பதுக்கு எல்லா பேச்சாளர்களும் தயாராக இருந்தனர். அரங்கமும் நிரம்பி இருந்தது - கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் அரங்கத்தை நிரப்பி இருந்தனர்.

திரு ராஜா மற்றும் திருமதி பாரதி பாஸ்கர் ஆகிய இருவரும் திரைப்பட நட்சத்திரம் போல் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்குவதிலும் போட்டோ எடுத்துக் கொள்வதிலும் பிஸியாக இருந்தனர்.

பட்டிமன்றம் விவாதத்திற்கு நல்ல தலைப்பை தேர்வு செய்திருந்தனர் - என்றென்றும் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு காதல் துணையா? தடையா?

மனித முன்னேற்றத்திற்கு காதல் தடையே என்ற அணியில் திருமதி ரஞ்சனி, புலவர் ராமலிங்கம் மற்றும் திரு ராஜா ஆகிய மூன்று பேச்சாளர்கள் வெளுத்து கட்டினார்கள். குறிப்பாக புலவர் ராமலிங்கம் பேச்சு மிக பிரமாதமாக இருந்தது. திரு ராஜா எப்போவும் போல எதிர் அணியின் வாதத்தை மையமாக வைத்து தனக்கே உரிய நய்யாண்டியுடன் மிக சிறப்பாக பேசினார்.

மனித முன்னேற்றத்திற்கு காதல் துணையே என்ற அணியில் திருமதி ஆர்த்தி, கவிஞர் சேஷாத்ரி மற்றும் திருமதி பாரதி பாஸ்கர் ஆகிய மூன்று பேச்சாளர்கள் மிக ஆவேசமாகவும் ஆர்வமாகவும் பேசினார்கள். கவிஞர் சேஷாத்ரி புலவர் ராமலிங்கத்தை தாக்கி பேசிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. பாரதி பாஸ்கர் கடைசி பெச்சலாளராக வந்து எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

நடுவர் ஐயா சாலமன் பாப்பையா தன்னை ஒரு பதினாறு வயது இளைஞன் என்று அறிமுகம் செய்துகொண்டார். அவரின் துவக்க விரிவுரையும் பேச்சாளர்களின் பேச்சுக்கு நடுவே சொன்ன நகைச்சுவை மிக்க துணுக்குகளும் வெகுவாக ரசிக்கும்படி இருந்தது.

ஒரு சிறந்த பட்டிமன்ற நிகழ்ச்சியை நேரில் கண்ட திருப்தி எனக்கு.

த.ப.ஆனந்த்
துபாய்
ஜனவரி இருபது இரண்டம் ஆயிரத்து பனிரெண்டு

3 comments:

  1. when you live in the bustle of daily life with your family,perhaps your interest in Pattimandram may not have been so huge as to stay for more than 4 hours (since it was delayed by 2 hours :D). Perhaps living in Dubai alone must have propelled you to do it.

    Pattimandrams are not my cup of tea, even when there are celebrity debaters like Raja/Bharati. The topics chosen are very pedestrian and the ideas stated there will not last even till you reach home after the Pattimandram. These debate shows have become one more substitute for films.

    ReplyDelete
  2. Your Tamil is superb! I cannot fathom how you wrote without mistakes. Super improvement

    ReplyDelete
  3. Mayandi... why this kolaveri on Pattimanrams!

    ReplyDelete