Sunday, January 6, 2013

சத்தியமுர்த்தி - SATHYAMURTHY


சத்தியமுர்த்தி என் எழுத்துலக ஆசான்.  நான் எழுத முற்பட்டது பல ஆண்டுகளுக்கு முன்.  என் முதல் பதிவு "ட்ரிங் ட்ரிங் ட்ரிங்" என்ற தலைப்பில் என் முதல் பணி இடமான ஸ்டர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் பத்திரிக்கையில்.  அதற்கு உந்துதலாக இருந்தது சத்தியமுர்த்தி.  நாங்கள் கல்லூரியில் படித்த நாட்களில் அவர் தன் கவிதைகளை எனக்கு காண்பித்து என் அபிப்ராயம் கேட்பார்.

சத்தியமுர்த்தி தமிழில் வைத்திருக்கும் ஆர்வமும் அவரது தமிழ் ஆளுமையும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது.  அவர் சிந்தனைகள் வித்தியாசமாக இருக்கும்.  மாத்தி யோசிக்கும் அவர் நல்ல நகைச்சுவை உணர்வுடன் எழுதுவது அவரது தனித்தன்மை.

கட்டுரை, கவிதை, விளையாட்டு விமர்சனம் மற்றும் ஹாஸ்யம் என்று வெளுத்து வாங்கிய சத்தியமுர்த்தி இப்பொழுது ஒரு புது முயற்சியாக சிறு நாடகம் எழுதியுள்ளார்.  இந்த நாடக வடிவமைப்பை படித்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.  சுஜாதாவும் கிரேஸி மோகனும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சி போல இந்த நாடகம் பரிமளிக்கிறது.

சத்தியமுர்த்தி எழுதிய இந்த நாடகம் "கால் மேல கால் போடு" அவர் அனுமதியுடன் இங்கே உங்களுக்கு வழங்குவதில் நான் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்.  படித்து ரசித்து சிறிது மகிழ இதோ "Call மேல Call போடு"
==========================================


ஆனியன் டிவி - புது வருட சிறப்பு நிகழ்ச்சி

Theme music plays (Surya to to take care of this)


Comperer (Aruna) enters the scene with a flourish 

அருணா:

Welcome to Onion TV - உரியுங்க உரியுங்க - உரிச்சுக்கிட்டே இருங்க

2013க்கு வெயிட் பண்ற இந்த கடைசி மணித்துளிகள்ல - 2012க்கு ஒரு குட்பை சொல்லலாமா? கம் ஆன் say with me -

say Goodbye 2012

if the response is low, make them say again, ”Goodbye 2012”

Very good, you are all Good Boys and Girls...

இன்னிக்கு ஆனியன் டிவியோட எக்ஸ்க்ளூசிவ் வருட கடைசி ப்ரோக்ராம் “call மேல call போடு” - 15 நிமிஷத்துல உங்களால எத்தன முடியுமோ அத்தனை கேள்வி கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க..... 

உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லப்போறவர் திரு. சுத்தீஷ்...

திரு சுத்தீஷ பற்றி சொல்லணும்னா, உலகமெங்கும் ஆணி பிடுங்க சுத்திய கைல எடுத்துக்கிட்டு சுத்திய அனுபவசாலி. 

தமிழக அரசோட கலைமா ஆணி பட்டம் வாங்கியவர். கின்னஸ் புத்தகத்துல கூட பேர் வாங்கியிருக்கார்.   ஆனா அதுக்கு இன்னும் பணம் செட்டில் பண்ணாததால அவர் பேர் இன்னும் அதுல இடம் பெறல. 

எங்க ஆபீஸ்ல வேண்டாத ஆணி பிடுங்க வந்து, தொடர்ந்து எங்கள இம்சை பண்ணி இந்த நிகழ்ச்சியில இடம் பெற்றிருக்கார். 

கலைமா ஆணியை உங்களுக்காக கேள்வி கேட்டு துளைக்க போகிறவர் அரட்டை அர்னாப்.

லெட்ஸ் வெல்கம் கலைமா ஆணி சுத்தீஷ்......

******

அர்னாப் (GKR): வணக்கம் திரு. சுத்தீஷ்

சுத்தீஷ்: வணக்கம்.

அர்னாப்: ஆணி பிடுங்கறத பத்தி பேசறதுக்கு முன்னால, உங்க கழுத்துல சுத்திய டை மாதிரி போட்டிருக்கீங்களே அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க

சுத்தீஷ்: இந்த சுத்தி என் மனைவி எனக்கு போட்ட தாலி, I mean, வேலி.  ஒரு தடவ நான் ஆணி புடுங்க ஒரு வீட்டுக்கு போயிருந்தேன். அங்க ரொம்ப உயரத்துல ஒரு ஆணி இருந்தது.  அவசரமா போனதுல நான் சுத்திய எடுத்துட்டு போக மறந்துட்டன்.  அந்த வீட்டம்மா, அவுங்க மகள்கிட்ட  சுத்திய கொண்டு வந்து கொடுக்க சொன்னாங்க.  கொண்டு வந்து கொடுத்த அந்த பெண் என் இதயத்துல பிடுங்க முடியாத ஒரு ஆணிய அடிச்சுட்டாங்க.  என் மனைவியா ஆயிட்டாங்க.  திருமணத்துக்கு பிறகு மீண்டும் அந்த மாதிரி விபத்து நேரக்கூடாதுன்னு, நான் எப்பவும் மறக்காம இருக்க சுத்திய தாலி போல என் கழுத்துல கட்டிட்டாங்க. 

அர்னாப்: ரொம்ப வித்தியாசமான பெண்ணத்தான் கல்யாணம் பண்ணியிருக்கீங்க.  அதுக்கப்புறம் நீங்க சுத்திய மறந்து போய் போனதில்லையா?

சுத்தீஷ்: மறக்க ஆசைதான்; ஆனா வீட்டுக்கு போனா நிஜ ஆணிய நெஞ்சுல அடிச்சுடுவாங்கங்கற ஒரு மரியாதையால நான் எங்க சுத்தினாலும் சுத்திய மறக்கறதே கிடையாது.

அர்னாப்: நீங்க எப்படி ஆணி பிடுங்கற தொழிலுக்கு வந்தீங்க? பரம்பரையா செய்யற தொழிலா இது?

சுத்தீஷ்: எங்க பரம்பரையில ஆணி பிடுங்க தொடங்கினது நாந்தான்.  சின்ன வயசில பம்பரம் விளையாடும் பொழுது ஆணி தேஞ்சு, புது பம்பரம் வாங்க காசில்லாம ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்.  பம்பரம் ஆணி சரியில்லாம மொக்கையடிக்கும், அப்பீட் எடுக்க முடியாது, கைல ஏத்த முடியாது.  அப்ப அவசியத்தால வீட்டில பாட்டி போட்டோவ கழட்டி அந்த ஆணிய புடுங்கி பம்பரத்துக்கு அடிச்சு விளையாடியிருக்கேன். 

அர்னாப்: ஓ மொன மழுங்கின பம்பர ஆணிய புடுங்கியிருக்கீங்களா.  இண்டெரெஸ்டிங்

சுத்தீஷ்: இல்ல சார்! அப்ப சுத்தியெல்லாம் வாங்கற வசதியில்ல.  அதுனால, மழுங்கின ஆணி பக்கமே புது ஆணிய அம்மிக்கல்லால அடிச்சுடுவேன்.  அந்த முயற்சியில பல நண்பர்களோட பம்பரம் ஒடைஞ்சு, ரொம்ப சோகம் சார்.  இதுக்காக என்னோட பள்ளி நண்பர்கள் 12 பாச்சா, 5 ராஜா, தாமு, ரங்கா எல்லார்கிட்டவும் இந்த நிகழ்ச்சி வாயிலா மன்னிப்பு கேட்டுக்கறேன்.  அவுங்குளுக்காக புது பம்பரம் வாங்கி வச்சிருக்கேன்.  அவுங்க அட்ரஸ் சொன்னா அவுங்களுக்கு அனுப்பிடுவேன்.

அர்னாப்: ஓ! எனக்கே அழுகை வரும்போல இருக்கு.  எமொஷன் கண்ட்ரோல் பண்ணிக்கங்க சுத்தீஷ்!   இப்பொ ஆணி புடுங்கற டெக்னிக் பற்றி கொஞ்சம் பேசலாமாஆணி எப்படி புடுங்கறது?

சுத்தீஷ்: ஆணி புடுங்கறதுல மொதல் வேல வீட்டை சுத்திப்பார்த்து, எந்த ஆணி வேணும், எது வேணான்னு கண்டு பிடிக்கறது.  சில ஆணிகள் இப்ப வேணாம் போல இருக்கும், ஆனா அத புடுங்கினவுடனே திரும்ப அடிக்கற தேவை வரும்.  என்ன ஆணி தேவை எது புடுங்கலாம் அப்படின்னு டிசைட் பண்ணதும், ஸ்டூல், சுத்தி இதல்லாம் ரெடி பண்ணி, செவுத்துக்கு பக்கத்துல ஸ்டூல.....

போர் பாவனா: சார் ஒரு நேயர் கால் பண்றாரு, அவர்கிட்ட பேசிட்டு தொடரலாம்!

காலர் 1 (விஜய்): ஹலோ!

போபோ: ஹலோ!

காலர் 1: ஹலோ, ஹலோ

போபோ: கேக்குது சார், சொல்லுங்க, என்ன கேள்வி கேக்கணும்

காலர் 1: ஹலோ, ஹலோ

போபோ: ஹலோ சத்தமாக....

போபோ: கால் கட்டாயிடுச்சு சார், நீங்க பேட்டிய தொடரலாம், ஸ்டூல சுவத்துக்கிட்ட போட்டுகிட்டு, ஆணி புடுங்கற சுத்திய எடுத்துக்கணும்னு சொல்லிட்டிருந்தீங்க

சுத்தீஷ்: ஆமா, சுத்தி எடுத்திகிட்டு, ஸ்டூல் மேல ஏறணும்.  அதுக்கு முன்னால, மனைவியையோ, மகனையோ கூப்பிட்டு, ஸ்டூல...

போபோ: சார் ஒரு நிமிஷம், இன்னொரு காலர் லைன்ல..  ஹலோ1

காலர் 2 (Dr Sriram): ஹலோ!ஹலோ ஹலோ....

போபோ: ஹலோ, சார் யார் பேசரீங்க...

காலர்2: ஹலோ, நான்ன்ன்ன்ன், சென்னை தண்டையார் பேட்டையிலருந்து தனபால் பேசறேன் - (Echo, repeats the same sound again)

அர்னாப்: சார் ஒங்க  டி வி வால்யூம கொஞ்சம் கம்மி பண்ணுங்க...

காலர் 2: ஹல்லோ சார்... என்ன சார்.... (இரைச்சல்)

அர்னாப்: டிவி டிவி டிவி வால்யும கொறச்சுட்டு பேசுங்க

காலர் 2: ஹலோ ஹலோ - சாவு கிராக்கி என்ன டிவி நடத்துரானுங்க, போன் லைன் க்ளியராவே இல்ல, சே.. (Hangs up the line)

போபோ: லைன் கட்டாயிடுச்சு சார், மறுபடியும் என்னிக்காவது போன் பண்ணுவாரில்ல அப்ப கேட்டுக்கலாம்... 
சுவத்துக்கிட்ட ஸ்டூல் போடறத பத்தி சொல்லிகிட்டிருந்தீங்க, மேற்கொண்டு சொல்லுங்க
சுத்தீஷ்: ஸ்டூல் மேல ஏற்றதுக்கு முன்னால
போபோ: இன்னொரு நேயர் லைன்ல” 
காலர் 3 (ஜெயஸ்ரீ): ஹலோ, ஹலோ
போபோ: மேடம் கொஞ்சம் டிவி வால்யும கொறச்சுட்டு பேசுங்க
காலர் 3 : “சார் நான் மதுரைலருந்து மீனாட்சி பேசறேன்
போபோ: சொல்லுங்க மீனாட்சி”, "சாரி, நான் சார் இல்ல சாரி கட்டியிருக்கேன் பாருங்க"
காலர் 3: ”ஆணி புடுங்கறவர நிகழ்ச்சிக்கு கூட்டி வந்ததுக்கு நன்றி; எனக்கு ரெண்டு சந்தேகம் சார், சாரி, ரெண்டு சந்தேகம் மேடம்” “எங்க வீட்டுல ஆணி புடுங்கற சுத்தி இல்ல, அப்ப பக்கத்து வீட்டுல வாங்கிக்கலாமா?, அப்பறம், திருகாணியாயிருந்தா எப்படி புடுங்கறது
போபோ:  ”நல்ல கேள்வி மீனாட்சி மேடம்”, ”ஆனா இந்த நிகழ்ச்சி சுவத்து ஆணி பிடுங்கறது பத்தி மட்டும்தான்.  சுத்திய பத்தி இப்ப பதில் சொல்வாரு, திருகாணிக்கு இன்னொரு நிகழ்ச்சி பண்ணுவோம் அப்போ அதுக்கு பதில் கிடைக்கும்
அர்னாப்: நானே கூட கேக்கணும்னு இருந்தேன் சார், நம்ம வீட்டுல சுத்தி இல்லன்னா என்ன செய்யறது
சுத்தீஷ்:நம்ம வீட்டுல சுத்தியில்லேன்னா பக்கத்து வீட்டுலருந்து வாங்கிக்கலாம்.  அதுனால சுவரோ, ஆணியோ பாதிக்கப்படாது.  ஆனா அவுங்ககிட்ட கேக்கறதுக்கு முன்னால, போன முறை வாங்கின சுத்தியோ, ஸ்க்ரூ ட்ரைவரோ திரும்ப கொடுத்தமான்னு ஒரு முறை செக் பண்ணிக்கறது நல்லது”.
மண்சுவரா இருந்தா சுத்தி கூட தேவையில்ல, கையாலயே ஆட்டி பிடுங்கிடலாம்” “சிமெண்ட் சுவரா இருந்தா சுத்தி நிச்சயம் வேணும். சுத்திய பிரயோகம் பண்றதுக்கு முன்னால கைல நகசுத்தி இல்லயான்னு செக் பண்ணிக்கணும்
அர்னாப்: அப்போ சுத்தி பக்கத்து வீட்டுல வாங்கறது தப்பில்லைன்னு சொல்றீங்க
சுத்தீஷ்:ஆமாம், இது பத்தி சில பேர் தப்பான அபிப்ராயம் வச்சிருக்காங்க.  பக்கத்து வீட்டுல சாதாரணமா கேட்டு வாங்கற பொருள்ள சுத்தியும் ஒண்ணு”, ”இதுல கவனத்துல வச்சுக்க வேண்டியது என்னன்னா, நாம இருக்கறது ஃப்ளாட்டா இருந்தா நாம ஆணி புடுங்க சுத்தி கேக்கறமா இல்ல அடிக்கவான்னு தெளிவா பக்கத்து வீட்டுல சொல்லிடறது நல்லது.  இல்லேன்னா நம்ம வீட்டுல ஆணி அடிக்கறது அவங்க வீட்டு செவுத்துல வெளில வந்து கோர்டு, கேசுன்னு போற அபாயம் இருக்கு”, இன்னொரு விஷயம் முக்கியமா நியாபகத்துல வச்சிருக்க வேண்டியது வீட்டு சொந்தக்காரர், அவர்கிட்ட மட்டும் சுத்தி கேக்கவே கூடாது
அர்னாப்: நல்லா தெளிவா நேயரோட கேள்விக்கு பதில் சொன்னதுக்கு நன்றி சார்”,
போபோ: மேல பேசறதுக்கு முன்னால ஒரு short commercial break
போபோ: Welcome back... “ஆணி புடுங்க சுவத்துக்கிட்ட ஸ்டூல் போடுறது பத்தி நாம பேசிட்டு இருந்தோம். 
சுத்தீஷ்:ஆமாம், சுவத்துக்கிட்ட ஸ்டூல் போட்டுட்டு, அது மேல ஏற்றதுக்கு முன்னால, சாதாரணமா வீட்டுல இருக்கற ஸ்டூலோட கால் ஆடும், அதுனால வீட்டுல பையனோ, மனைவியோ யாராவது இருந்தா அவுங்கள கூப்பிட்டு ஸ்டூல் பிடிச்சுக்க சொல்லணும்

போபோ: சார், இன்னொரு நேயர் லைன்ல இருக்கார், அவருகிட்ட பேசிட்டு தொடரலாம். ஹலோ
காலர் 4 (நிரஞ்சன்): ஹலோ மேடம்நான் சென்னை வேளச்சேரியிலருந்து நிரஞ்சன் பேசரேன் மேடம்.   சார் இப்போ ஆணி புடுங்கும் போது ஸ்டூல் புடிச்சுக்க மனைவி, மகன் யாராவது கூப்பிடணும்னு சொன்னாரே, மனைவி, மகன் ரெண்டு பேரும் இல்லேன்னா என்ன செய்யறது?”
சுத்தீஷ்:  “சார் உங்ககிட்ட சுத்தி இருக்கா, பக்கத்து வீட்டுல வாங்கணுமா?”
காலர் 4: “சார், என்ன சார் கேட்டீங்க
சுத்தீஷ்:இல்ல சார், ஆணி புடுங்க மனைவியோ, மகனோ இல்லேன்னா என்ன செய்யலாம்னு கேட்டிங்க இல்ல”  ”அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னால, உங்ககிட்ட சொந்தமா சுத்தியிருக்கா, இல்ல பக்கத்து வீட்டுல வாங்கணுமான்னு சொல்லுங்க
காலர் 4: “இல்ல சார், எங்க கிட்ட சுவரும் ஆணியும் மட்டும்தான் சார் இருக்குசுத்தி பக்கத்து வீட்டுலருந்துதான் சார் வாங்கணும்
சுத்தீஷ்: அப்ப சார், நீங்க, சுத்தி வாங்கும் போது, அவங்க பையன்கிட்ட கொடுத்தனுப்ப சொல்லி அவன பிடிச்சுக்க சொல்லலாம்
காலர் 4: “என்ன சார்?”
சுத்தீஷ்: இப்ப உங்ககிட்ட சுத்தி இல்லேன்னு சொன்னீங்கல்ல
காலர் 4: “ஆமாம் சார்
சுத்தீஷ்: மனைவியோ மகனோ இல்லேன்னு சொன்னீங்கல்ல
காலர் 4: “ஆமாம் சார்
சுத்தீஷ்: சுத்தி பக்கத்து வீட்டுல வாங்குவீங்கல்ல
காலர் 4: “அஆன்ன் சார்
சுத்தீஷ்: அப்ப அவுங்க வீட்டுலருந்து பையனயும் கூப்பிட்டுக்கோங்க.  அவுங்க மனைவியை கூப்பிடாதீங்க
காலர் 4: “அதுனால ஒண்ணும் பாதிப்பு  இருக்காதா சார்
சுத்தீஷ்: பல ஆணி புடுங்கின அனுபவத்துல சொல்றேன்.  பக்கத்து வீட்டுக்காரரோட மனைவிய கூப்பிட்டா பாதிப்பு இருக்கும்.  முக்கியமா, ஒங்க மனைவியோ, அவர் கணவரோ இருக்கும் பொழுது கூப்பிட்டா ரொம்ப அதிக பாதிப்பு இருக்கும். அதே அவுங்க பையனா இருந்தா அதுனால ஒரு பாதிப்பும் இருக்காது”,  ”என்ன ஆணி புடுங்கும் போது சுத்தி அவன் தலைல விழாம பாத்துக்கணும்

போபோ: ஒங்க காலுக்கு நன்றி திரு நிரஞ்சன்.  அடுத்த காலர் லைன்ல வராங்க, இவுங்க ஒரு பெண்மணி!

காலர் 5 (ரேவதி):  மேடம் நான் குவைத்லருந்து ரேவதி பேசறேன்! 

போபோ: சொல்லுங்க ரேவதி, கலைமா ஆணி சுத்தீஷ் கிட்ட என்ன கேள்வி கேக்கணும்

காலர் 5: அவர்கிட்ட ஒண்ணும் கேக்க வேணாம் மேடம்.  உங்க கிட்டதான் பேசணும். ஒங்க குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு, நல்ல அழகா ட்ரஸ் பண்ணிட்டிருக்கீங்க மேடம், ரொம்ப யங்கா இருக்கீங்க! ஒங்க ஸ்டைல் பேச்சு எல்லாம் சூப்பர

போபோ: ரொம்ப தேங்க்ஸ் ஆனா ரொம்ப ஓவரா புகழாதீங்க...

காலர் 5: என்ன மேடம் இப்டி சொல்றீங்க.  காலைல நீங்கதான என்கிட்ட போன் பண்ணி இப்டி சொல்ல சொன்னீங்க.  

போபோ: சரி சரி எல்லா உண்மையும் லைவ் ஷோவ்லயே சொல்லணுமா. வெச்சுடுங்க.

திடீரென்று ஒரு இளைஞர் (சூர்யா) ஷோவுக்குள் வந்து திருமலை விஜய் ஸ்டைலில் இங்க யாருய்யா ஆணி பிடுங்கி, யாரு யாரு யாரு? அர்னாப் கிட்ட போய் நீயா

அர்னாப் சுத்தீஷ் நோக்கி கை காட்ட

நீயா?”

சுத்தீஷ்: பயந்தபடி நான் தான் சுத்தீஷ், என்ன ப்ராப்ளம் சார்

ரவுடி: நீ என்ன பெரிய ஆணி புடுங்கியா

இந்தாடா, என் கால்ல ரெண்டு ஆணியிருக்கு - இதையும் புடுங்குடா...  

சுத்தீஷ்: சார் சார் சார், அதுக்கு நான் இப்பதான் புது கோர்ஸ் சேர்ந்திருக்கேன்.  ரெண்டு மாசம் கழிச்சு என்ன தொடர்பு கொள்ளுங்க.

ரவுடி: Ennai enna Yemaandhavannu nenaichiyaa? Enna paathaa muttaalaa theriyudhaa? Paaru padichavan maadiri kannadiyellaam pottirukken paaru. Un phone number address illama unnai eppidiyyaa rendu maasam kalichu contact seiyaradhu?

po po: ரவுடி சார், பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. உங்களூக்கு தெரியாதா சார். இந்த ப்ரோக்ராம் ரெகார்ட் பண்ணிகிட்டிருக்கோம். இந்த ரெகார்டிங் ரெண்டு மாசம் கழிச்சு லைவா மறுஒளிபரப்பு செய்வோம்.  அப்ப அவர காண்டாக்ட் பண்ணலாம்... அந்த ப்ரோக்ராம்ல இப்ப வந்த எல்லாரும், உங்களுக்காக இதே மாதிர் வருவோம். ஏமாத்த மாட்டோம்.

ரவுடி:  nee oththi thaanmaa ingga paakkaa azhaagar irukkey. Correctaa pesara.  nee sonnadhunaala naan ippo poren.  Rendu maasam kazhichu varuven, appo mattum nee en kaal aaniya pudungala, mavane onga ellaraiyum olagatha vutte pudungiduven...

(leaves the stage)

போபோ: சார் இந்த மாதிரி ரவுடியெல்லாம் எப்படி சார் ஷோவுக்குள்ள வந்தாங்க... ரொம்ப சாரி மிஸ்டர் சுத்தீஷ்... இன்னொரு கால் வருது

காலர் 6 (டாக்டர் கோமதி): ஹலோ கால் மேல கால் போடு ஷோவா?

போபோ: ஆமாம் மேடம், மிஸ்டர் சுத்தீஷ் கிட்ட என்ன கேட்கணும்...

காலர் 6: அவங்கிட்ட எனக்கு என்ன பேச்சு, அங்க அர்னாப் இருக்காரா? அவர்கிட்ட பேசணும்...

அர்னாப்: அர்னாப் பேசறேன், சொல்லுங்க...

காலர் 6: யாரு தெரியலயா? நாந்தான் பேசறேன்.. அங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க?

அர்னாப்: ஒன்னோட புடுங்கல் தாங்காமதான் இங்க வந்தேன், இங்க ஸ்டுடியோவுல இன்டர்வ்யூக்கு நடுவுல ஏன் போன் பண்ணின?

காலர் 6:  எங்க போனாலும் பேசிண்டே ஒக்காந்துருவேளா, இதுல அடாவடி அர்னாப்னு புனைப்பெயர் வேற... பக்காத்தாத்துலேந்து சுத்திய வாங்கி திருப்பி கொடுக்கலையாமே? அவா ஆணி பிடுங்கணுமா, இப்ப என்ன புடுங்கறா... சுத்தி எங்கே?

அர்னாப்: சார் நான் இப்ப அர்ஜென்டா வீட்டுக்கு போகணும், இல்லேன்னா என் வைஃப் வந்து என் தலைல ஆணி அடிச்சுடுவா... நாம் இன்னொரு நாள் ஸ்பான்ஸர் ப்ரோக்ராம் பண்ணலாம், அல் முல்லால பேசிருக்கேன், நன்றி வணக்கம் (கை கூப்பி எழ, அவர் மொபைல் அடிக்கிறது, எடுத்து பார்த்து தலையில் கை வைத்துக் கொண்டே ஓடுகிறார்)

அவர் பின்னாலேயே போபோ “என்ன திடீர்னு ஓடறார், ஏதாவது பாம்பு த்ரெட்டா? (இவரும் ஓடுகிறார்...) கலைமா ஆணி திரு திரு திரு என முழிக்கிறார்.
 =============================================

 என்னுடைய  நெருங்கிய நண்பனும் எழுத்துலக ஆசானுமான சத்யமுர்திக்கு ஒரே ஒரு வேண்டுகோள் - இது போன்ற நாடகங்கள் பல எழுதவும்.

தி. பா. ஆனந்த 
துபாய் 
6 - 1 - 2013




1 comment:

  1. Dear Anand,

    Thanks for publishing my skit in your popular blog and the kind words of praise.

    Regards
    Sam

    ReplyDelete