Thursday, July 14, 2011
சீர்காழி கோவிந்தராஜன்
திரு.சீர்காழி கோவிந்தராஜன் எனக்கு மிகவும் பிடித்த பாடகர். நான் என் சிருவயதில்
“அகஸ்தியர்” படம் பார்த்போது அவரது பாட்டுத்திறனையும் நடிப்புத்திறனையும் கண்டு வியந்தேன்.
நான் CA படித்த காலத்தில் அடிக்கடி முணுமுணுத்த பாடல் “ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்”. கணீரென்ற அந்த குறலை எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம்.
அவர் 55வது வயதில் மரணம் அடைந்தது இசை துறைக்கு ஓர் பேரிழப்பு. சிறு வயதில் இறந்து போன சில அறிய கலை பொக்கிஷங்கள் - சீர்காழி கோவிந்தராஜன் (55); கவியரசு கண்ணதாசன் (54) சந்திரபாபு (47) - காலத்தால் அழியாப்புகழ் பெற்ற பெறும் பாக்கியசாலிகள்.
எனக்கு மிகவும் பிடித்த சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை பட்டியலிட்டிருக்கிறேன்:
1. உள்ளத்தில் நல்ல உள்ளம் உற்ங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா
2. அமுதும் தேனும் எதற்க்கு நீ அருகினில் இருக்கயிலே எனக்கு
3. ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
4. கல்லிலே கலை வண்ணம் கண்டான்
5. ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
6. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
7. மதுரை அரசாளும் மீனாக்ஷி
8. வினாயகனே வினை தீர்ப்பவனே
9. தேவன் கோவில் மணியோசை
10.நீ அல்லால் தெய்வம் இல்லை
11.கணபதியே வருவாய் அருள்வாய்
12.ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கறையினிலே
13.வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
14.அபினய சுந்தரி ஆடுகிறாள்
15.இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
16.நெஞ்சில் உறம் இன்றி நேர்மை திற்ன் இன்றி
17.வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம்
18.சின்னன்சிறு பெண் போலே
19.ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
20.அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
21.ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
22.Beautiful Marvelous Excellent Very Very Excellent நான் பிற்ந்திருக்க
வேண்டியது England.
-தி.பா.ஆனந்த்
துபாய்
14th July 2011
Labels:
devotional songs,
old songs,
seergazhi govindarajan
Subscribe to:
Post Comments (Atom)
அபினய சுந்தரி ஆடுகிறாள் - பாடியது சீர்காழியின் மகன் டாக்டர் சிவசிதம்பரம்.
ReplyDeleteசீர்காழியின் மறக்கமுடியாத பாடல் “காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை”; இன்னொரு பாடல் பூவா தலையா போட்டால் தெரியும் நீயா நானா பார்த்துவிடு.